2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா
2011 தீபாவளி
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரும் படங்கள் ஸ்பெஷலாக அமையும்.

அப்படி விஜய், சூர்யா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்த தீபாவளி என்றால் அது, 2011ஆம் ஆண்டு தீபாவளிதான். விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7ஆம் அறிவு மற்றும் ஷாருக்கானின் ரா ஒன் ஆகிய திரைப்படங்கள் 2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றன.
வசூல்
7ஆம் அறிவு அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்தது. இதன்பின் 26ஆம் தேதி வேலாயுதம் மற்றும் ரா ஒன் படங்கள் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களும் வெளிவந்து 14 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில், வசூல் குறித்து விவரங்களை பார்க்கலாம் வாங்க.

7ஆம் அறிவு படம் உலகளவில் ரூ. 100+ கோடி வசூல் செய்தது. இதுவே சூர்யாவின் முதல் ரூ. 100 கோடி படமாகும். விஜய்யின்வேலாயுதம் படம் ரூ. 65+ கோடி வசூல் செய்தது. மேலும் ஷாருக்கானின் ரா ஒன் படம் ரூ. 205+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
