2019 பொங்கலுக்கு வெளிவந்த விஸ்வாசம் - பேட்ட படங்களின் மொத்த வசூல் விவரம்.. இதோ
பேட்ட - விஸ்வாசம்
பொங்கல் பண்டிகை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த ஆண்டு தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவரவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அதுவும் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானது என்றால் சொல்லவே தேவையில்லை, திரையரங்கம் திருவிழா கோலமாக மாறிவிடும்.

அப்படி 2019ஆம் ஆண்டு உலகமெங்கும் உள்ள திரையரங்கங்கள் திருவிழா கோலமாக மாறியது. காரணம், அந்த பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
வசூல்
இந்த நிலையில், பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்து 7 ஆண்டுகள் நிறைவாகிவிட்டது. 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிபெற்ற இந்த இரண்டு திரைப்படங்களின் வசூல் விவரங்கள் இதோ..
- பேட்ட - ரூ. 220 கோடி
- விஸ்வாசம் - ரூ. 200 கோடி