2021ல் சீரியல்களில் நடந்த மாற்றங்கள், புதிய வரவு- ஒரு ரீவைண்ட்
சின்னத்திரை மக்கள் இப்போது அதிகம் அடிமையாகி இருக்கும் ஒரு கலை. அதிலும் இந்த கொரோனா காலத்தில் இந்த பக்கம் வராதவர்கள் கூட அதிகம் ஈடுபாடு காட்டுகிறார்கள்.
எனவே தொலைக்காட்சிகளுக்குள் TRP சண்டைகள் இடம்பெறுகின்றன. புத்தம் புதிய தொடர்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்த வண்ணம் உள்ளன.
சொல்லப்போனால் தொடர்களை ஒளிபரப்ப சில தொலைக்காட்சி மண்டை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு புலம்புகிறார்கள் என்று கூட கூறலாம். சரி இனி புதிய தொடர்கள் வரப்போகிறது, மக்கள் பலரை வரவேற்க போகிறார்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும்.
நாம் இந்த வருடத்தில் தொடர்களில் நடந்த மாற்றங்கள் பற்றி காணலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப பாங்கான அண்ணன்-தம்பிகளின் கதை. இதில் 4வது தம்பி கண்ணனின் காதலியாக நடித்து வந்தவர் தொகுப்பாளினி தீபிகா. இவருக்கு முகத்தில் மேக்கப் போடுவதால் பிரச்சனை ஏற்பட அவருக்கு பதிலாக சாய் காயத்ரி மாற்றப்பட்டார்.
பாரதி கண்ணம்மா
TRP யில் நம்பர் 1 இடத்தில் பல வாரங்கள் இருந்த சீரியல். இதில் அகில் என்ற வேடத்தில் அகிலன் என்பவர் தான் நடித்து வந்தார், அவருக்கு பட வாய்ப்பு வர மாற்றப்பட்டார். அடுத்து இந்த சீரியலின் முக்கிய நாயகியாக நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து திடீரென விலக அவருக்கு பதில் வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.
பாக்கியலட்சுமி
இந்த தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடிகை ஜெனிபர் நடித்து வந்தார், அவர் இரண்டாவதாக கர்ப்பமாக சீரியலில் இருந்து வெளியேறினார். அவரது கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.
காற்றுக்கென்ன வேலி
இளமை துள்ளும் ஒரு கதைக்களம், அதாவது இளைஞர்கள் ரசிக்கும் ஒரு தொடர். இதன் நாயகனாக தர்ஷன் என்பவர் நடித்தார், அவர் வேறு கதைகளில் கமிட்டாக தலைமுடி மாற்ற வேண்டும் என்ற நெருக்கடி வந்ததால் வெளியேறினார். அவருக்கு பதில் சுவாமிநாதன் என்பவர் நடிக்கிறார்.
செம்பருத்தி
ஜீ தமிழில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிய தொடர். இதன் நாயகன் கார்த்திக் திடீரென விலக அக்னி என்பவர் நடிக்கிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர்
இந்த தொடரின் நாயகியாக நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை ரச்சிதா. இவர் திடீரென தொடரில் இருந்து விலக அரண்மனை கிளி தொடர் ஜானு சீரியலின் நாயகியாக நடிக்கிறார்.
பூவே உனக்காக
இதுவும் ஹிட்டான ஒரு தொடர் தான். முக்கிய நாயகனாக அருண் நடித்து வர பின் ஏதோ காரணத்தால் அவர் வெளியேறினார். இப்போது அசிம் என்ற நடிகர் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ரோஜா
TRP யில் டாப்பில் இருக்கும் தொடர். இதில் வில்லியாக ஷாமிலி நடித்து வர கர்ப்பமாக இருப்பதால் வெளியேறினார். அவர் நடித்துவந்த அனு வேடத்தில் தொகுப்பாளினி அக்ஷயா நடிக்கிறார்.
வானத்தை போல
சமீபத்தில் தான் இந்த தொடரில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் வெளியேறினார்கள்.
துளசி வேடத்தில் மான்யா என்பவர் புதியதாக நடிக்க சின்னராசுவாக ஸ்ரீ நடிக்க கமிட்டாகியுள்ளார்.