சமந்தா-நாக சைத்தன்யா, டி.இமான் போல 2021ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் யார் யார்?
சினிமா பிரபலங்களுக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் முதலில் பாதிப்பது அவர்களது ரசிகர்களை தான்.
நல்ல விஷயத்தின் போது பெரிய அளவில் கொண்டாடும் அவர்கள் சோகமான விஷயங்கள் நடக்கும் போது அப்படியே கஷ்டப்படுகிறார்கள். அப்படி சினிமா பிரபலங்களில் 2021ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் சிலர் உள்ளார்கள்.
அதில் சிலரது பிரிவு ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அப்படி யார் யார் பிரிந்தார்கள் என்ற விவரம் இதோ,
சமந்தா-நாக சைத்தன்யா
இருவரும் தெலுங்கில் யே மாய சேசவே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்கள். அந்த படத்தில் இருந்து இருவருக்கும் நட்பு ஏற்பட அப்படியே காதலாக மாறியது. பின் இருவரும் குடும்பத்தின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு திருமணம் செய்தார்கள். திடீரென இந்த வருடம் அக்டோபர் மாதம் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.
டி.இமான்-மோனிகா ரிச்சர்ட்
தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருபவர் டி.இமான். 13 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது மனைவியை பிரிந்துவிட்டதாக அறிவித்திருந்தார்.
சுஷ்மிதா சென்-ரோஹ்மன் ஷால்
திருமணமே செய்துகொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். ரோஹ்மன் ஷால் என்பவரை காதலித்து வந்த இவர் தற்போது பிரிந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri