திரிஷா
தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு, 96 திரைப்படம் அவரது வாழ்க்கையில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் சோலோ ஹீரோயினாகவும், கதாநாயகியாகவும் கலக்கி வந்தார்.
மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை திரிஷா தற்போது தனது திரை வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்சில் பட்டையை கிளப்பி வருகிறார்.
தளபதி விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் ஒரு படம், பாலிவுட் பிரவேசம் என 40 வயதிலும் மார்க்கெட் இழக்காத நாயகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடி முதல் ரூ. 100 கோடி இருக்குமாம்.
இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இவர் விளம்பர படங்கள் மூலம் வருடத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பாதித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
நடிகை திரிஷாவிற்கு ரூ. 7 கோடி மதிப்பு சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்று இருக்கிறதாம். மேலும் ஹைதராபாத்தில் திரிஷாவிற்கு ரூ. 6 கோடி மதிப்பில் பெரிய பங்களா ஒன்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
திரிஷா பயன்படுத்தும் கார்கள், BMW Regal- ரூ. 5 கோடி, Mercedes-Benz S-Class - ரூ. 80 லட்சம், BMW 5 Series - 75 லட்சம், Range Rover Evoque - ரூ. 60 லட்சம்.
You May Like This Video

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu
