2024ம் வருடத்தில் அதிக சம்பளம் பெற்றுள்ள நடிகை யார் தெரியுமா?... நயன்தாரா இல்லை யார்?
பிரபல நடிகை
2024ம் வருடத்தின் இறுதி மாதம் வந்துவிட்டது, இதனால் இந்த வருடத்தின் சிறப்புகள், சோகமான விஷயம், டிரெண்டாக் டாக்ஸ் என அனைத்தையும் மக்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் இந்த வருடத்தின் சிறந்த படம், டாப் நாயகன், நாயகி போன்ற பல தகவல்கள் வர தொடங்கியுள்ளன. அப்படி நாம் இப்போது ஒரு விஷயம் குறித்து தான் பார்க்க போகிறோம்.
சம்பளம்
முந்தைய காலகட்டத்தில் நாயகர்களின் சம்பளம் தான் அதிகமாக இருந்தது, ஆனால் இப்போது நாயகிகளின் சம்பளமும் அதிக அளவு உயர்ந்துகொண்டே போகிறது.
அப்படி 2024ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நாயகி யார் என்ற தகவல் உலா வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தான் இருப்பார் என பல பேர் நினைக்கலாம், ஆனால் அவர் இல்லை நடிகை த்ரிஷா தானாம். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்திருக்கும் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.
அப்படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷாவிற்கு ரூ. 12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகிவிட்டார் த்ரிஷா.