2025ல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் என்னென்ன.. ஒரு லிஸ்ட்
படங்கள்
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அஜித் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
காரணம் பிப்ரவரி விடாமுயற்சி, அடுத்து ஏப்ரல் மாதமே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படம் வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ரஜினியின் கூலி, கமல்ஹாசனின் தக் லைஃப் என முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் விஜய் நடிப்பில் அடுத்த வருடம் தான் ஜனநாயகன் ரிலீஸ் ஆக உள்ளது.
தீபாவளி
ஏதாவது ஸ்பெஷல் தினங்கள் வந்தாலே முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும். அப்படி இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்பதை காண்போம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 45வது படம், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகும் LIC போன்ற படங்கள் தீபாவளி ரிலீஸ் லிஸ்டில் உள்ளது.
இன்னும் 5 மாதங்கள் தீபாவளிக்கு இருப்பதால் வேறு படங்கள் இணைகிறதா என்பதை பொறுத்திருந்து காண்போம்.