2025ல் அதிகம் views பெற்ற தமிழ் பாடல் இதுதான்.. Youtubeன் டாப் லிஸ்ட்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல படங்கள் ஹிட் ஆகி இருக்கின்றன. அதிலும் இணையத்தில் பெரிய அளவில் சில பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன.
அந்த வகையில் youtubeல் 2025ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பட பாடல் எது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கோல்டன் ஸ்பேரோ
தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் வரும் கோல்டன் ஸ்பேரோ பாடல் தான் 2025ல் அதிகம் பார்வைகளை பெற்று இருக்கிறதாம்.
இதுவரை 248 மில்லியன் பார்வைகளை இந்த பாடல் பெற்று இருக்கிறது. கூலி படத்தின் மோனிகா பாடல் 241 மில்லியன் பெற்று இருக்கிறது.
இதற்காக நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Highest viewed song in YouTube for Tamil films this year … thanks team #NEEK and my director @dhanushkraja … @theSreyas https://t.co/XJ5fettiQp #goldensparrow
— G.V.Prakash Kumar (@gvprakash) December 29, 2025