2025ஆம் ஆண்டு ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
வசூல்
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அப்படத்தின் வசூலை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது.
அதிலும் தற்போது வெளிவரும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரூ. 500 கோடி, ரூ. 1000 கோடி அல்லது அதற்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கிறது. அதை தான் அவர்களுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், டாப் 10 படங்கள் குறித்து செய்திகள் வெளிவரும். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு ரூ. 500 கோடிக்கும் மேல் இந்திய சினிமாவில் வசூல் செய்த படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
500 கோடி
அதன்படி காந்தாரா சாப்டர் 1, சாவா, சையாரா, கூலி மற்றும் துரந்தர் ஆகிய ஐந்து இந்திய திரைப்படங்கள் மட்டுமே இந்த ஆண்டு ரூ. 500 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது.

இதில் துரந்தர் திரைப்படம் ரூ. 500 கோடியை கடந்து வெற்றிகரமாக தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.