2025ல் உலகளவில் தமிழ் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. லிஸ்ட் இதோ
2025 தமிழ் சினிமா
விடாமுயற்சி, டிராகன், டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ, GBU, மாரீசன், லெவன் என 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்த்திருந்தோம்.
டாப் 10
அதனை தொடர்ந்து 2025ல் கடந்த 8 மாதங்களில் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன, இதில் யாருடைய படம் டாப்பில் உள்ளது என்று இந்த லிஸ்டில் பார்க்கலாம் வாங்க.
- கூலி - ரூ. 515+ கோடி
- குட் பேட் அக்லி - ரூ. 280 கோடி
- டிராகன் - ரூ. 150+ கோடி
- விடாமுயற்சி - ரூ. 145+ கோடி
- குபேரா - ரூ. 130+ கோடி
- தலைவன் தலைவி - ரூ. 102 கோடி
- ரெட்ரோ - ரூ. 100+ கோடி
- தக் லைஃப் - ரூ. 97+ கோடி
- டூரிஸ்ட் பேமிலி - ரூ. 91 கோடி
- வீர தீர சூரன் - ரூ. 70 கோடி
இதில் ரஜினிகாந்தின் கூலி, அஜித்தின் GBU மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ஆகிய திரைப்படங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருடத்தின் இறுதியில் இந்த லிஸ்டில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.