2026 பொங்கல் வின்னர் யார்..? உண்மையை கூறிய பிரபல விநியோகஸ்தர்..
2026 பொங்கல்
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு மொழிகளிலிருந்து பல திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் தமிழில் பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெளிவந்தது.

இதில் சிவகார்த்திகேயன் நடித்த பராசத்தி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக படக்குழுஅறிவித்தது. இதன்பின் வெளிவந்த வா வாத்தியார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தை பார்த்தோம்.

ஆனால், இதை தொடர்ந்து வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
எப்போதுமே பொங்கல் பண்டிகை அன்று வெளிவரும் படங்களில் எந்த படம் பந்தயம் அடித்தது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும். அந்த வகையில் இந்த ஆண்டு எந்த படம் பொங்கல் வின்னர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
TTT
அதன்படி, பராசக்தி, வா வாத்தியார் மற்றும் தலைவர் தம்பி தலைமையில் (TTT) ஆகிய மூன்று படங்களில் தலைவர் தம்பி தலைமையில் படம்தான் 2026 பொங்கல் வின்னர் ஆகியுள்ளது. இந்த தகவலை பிரபல விநியோகஸ்தர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
