2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

By Karthick Raja Nov 08, 2026 07:30 AM GMT
Report

2027 Pongal Release Movies: வருகிற 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகப்போகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 25-வது நாளில் ஜெயிலர் 2.. உலகளவில் செய்துள்ள வசூல்! விவரம் இதோ

பாக்ஸ் ஆபிஸ்: 25-வது நாளில் ஜெயிலர் 2.. உலகளவில் செய்துள்ள வசூல்! விவரம் இதோ

பண்டிகை நாட்கள்

தீபாவளி, பொங்கல் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு என்ன புதிய திரைப்படம் வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படத்தை முதல் நாள் முதல் ஷோவில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2027 Pongal Release Movies List

2026 தீபாவளி

அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு தீபாவளிக்கு மூன்று முக்கிய திரைப்படங்கள் வெளியாகின. சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மற்றும் ரன்பீர் கபூரின் ராமாயணா பாகம் 1. இந்த மூன்று திரைப்படங்களில் சீன் மற்றும் ராமாயணா திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2, ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2027 Pongal Release Movies List

2027 பொங்கல்

தீபாவளி பண்டிகையை முடித்த கையோடு சினிமா ரசிகர்கள் அனைவரும், வருகிற 2027-ஆம் ஆண்டு பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதை உற்றுநோக்க தொடங்கியிருப்பார்கள். அதற்கேற்றார்போல், தயாரிப்பு நிறுவனங்களும் தொடர்ந்து தங்களது திரைப்படங்கள் 2027 பொங்கலுக்கு வெளியாகின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2027 Pongal Release Movies List

இந்த நிலையில், 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பாக வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • க்ளாடியேட்டர்ஸ் (அஜித் குமார்)
  • பாக்கெட் நாவல் (விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்)
  • புருஷன் (விஷால், தமன்னா)
  • டயங்கரம் (VJ சித்து)
  • வேட்டுவம் (ஆர்யா, சோபிதா, தினேஷ்)
  • டிமாண்டி காலனி 3 (அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர்)

இதுவரை 6 திரைப்படங்கள் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் சில திரைப்படங்கள் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அறிவிக்கப்பட்ட சில திரைப்படங்கள்கூட, கடைசி நேரத்தில் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது என்றும் திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US