22 வருடத்தை எட்டியுள்ள நடிகர் அஜித்தின் வில்லன் திரைப்படம்.. படத்தின் மொத்த வசூல் பற்றி தெரியுமா?
வில்லன் படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித், மீனா, கிரண் ரத்தோட் என பலர் நடிக்க நவம்பர் 4 2002ம் ஆண்டு வெளியான படம் வில்லன்.
அஜித் டபுள் ரோலில் நடித்துள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர பிளாக் பஸ்டர் வசூல் சாதனை செய்தது. இப்படம் தெலுங்கில் இதே பெயரில் ராஜசேகர் நடிப்பில் தயாராகி 2003ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
39 நாட்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கின்றனர். வித்யாசாகர் இசையமைப்பில் இப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் செம ஹிட் தான்.
முழு வசூல்
பெரிய நடிகர்களின் படங்கள் பற்றி எந்த ஒரு விஷயம் என்றாலும் ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள். டாப் நடிகர்களின் பழைய படங்களின் ரிலீஸ் தேதி வந்தாலே இப்போதெல்லாம் அப்படம் பற்றி ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள்.
அப்படி இதே நாளில் பல வருடங்களுக்கு முன் அஜித்தின் வில்லன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் இப்படம் மொத்தமாக அப்போது ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
