23 வருட திருமண நாள், கியூட்டாக கொண்டாடிய அஜித் மற்றும் ஷாலினி- கலக்கல் புகைப்படங்கள்
அஜித்-ஷாலினி
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஜோடி அஜித்-ஷாலினி. பிரபலங்களில் நிறைய ஜோடிகள் இருந்தாலும் இவர்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்பெஷல் ஜோடிகள் என்றே கூறலாம்.
2000ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டார்கள்.
அஜித் வீட்டில் அவரது காதலுக்கு உடனே ஓகே என்றாலும் ஷாலினி குடும்பத்தில் அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லையாம். பல பிரச்சனைகளுக்கு பின்பு தான் ஒருவழியாக திருமணத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள்.
திருமண நாள் கொண்டாட்டம்
அண்மையில் இவர்கள் இருவரும் தங்களது 23வது திருமண நாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் உடன் தினமும் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் பிரபல நடிகை! யார் தெரியுமா?