23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா?
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஒருவர், தனது 23 வயதிலேயே ரூ. 250 கோடி சொத்து அதிபதியாக இருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. அவர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
ஜன்னத் ஜுபைர்
அந்த நடிகையின் பெயர் ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி. இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக திரைத்துறையில் மாறியுள்ளார். தில் மில்கே, காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா, ஃபுல்வா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் ஃபியர் ஃபேக்டர் கத்ரோன் கே கிலாடி 12 மற்றும் சிரிப்பு செஃப் ஆகிய ரியாலிட்டி ஷோக்களிலும் நடிகை ஜன்னத் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஜன்னத் கத்ரோன் கே கிலாடி என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.
சம்பளம் - நிகர மதிப்பு
இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு இவர் ரூ. 18 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி சிரிப்பு செஃப் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடிற்கு ரூ. 2 லட்சமும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ. 1.5 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். நடிகை ஜன்னத் ஜுபைர் தனது 21வது வயதில் மும்பையில் சொந்த வீடு வாங்கியுள்ளார்.
மேலும் நடிகை ஜன்னத் ஜுபைர் நடிகை மட்டுமல்ல, வெற்றிகரமான தொழிலதிபரும் ஆவார். இந்த நிலையில், இவருடைய நிகர மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 250 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.