25 கோடி கடன் வாங்கினேனா.. எனக்கு என்னை பாத்துக்க தெரியும்: சமந்தா காட்டமாக கொடுத்த பதில்
சமந்தா
நடிகை சமந்தா தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நோயால் சமந்தா படுத்த படுக்கையாக இருந்ததாகவும், உடலை அசைக்க கூட முடியாத அளவுக்கு வலி இருக்கும் என்றும் அவரே பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
சமந்தா சிகிச்சை பெற்றுக்கொண்டே ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டார். தற்போது சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்க்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
முதலில் ஆன்மீக பயணம் அதன்பின் தோழிகள் உடன் வெளிநாட்டு பயணம் என நேரத்தை அவர் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சமந்தா அவரது சிகிச்சை செலவுக்காக ஒரு பிரபல ஹீரோவிடம் 25 கோடி ருபாய் கடன் வாங்கினார் என நேற்று செய்தி பரவியது.

விளக்கம்
இந்நிலையில் தற்போது சமந்தா இந்த செய்தி பற்றி கோபமாக இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.
"மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு 25 கோடியா. உங்களை யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள். நான் அதில் ஒரு சின்ன தொகையை தான் செலவு செய்கிறேன்."
'நான் இத்தனை காலம் என்ன சம்பாதித்தேன் என நினைக்கிறீர்கள். என்னை எனக்கு பார்த்து கொள்ள தெரியும்.'
'இந்த நோய் பல ஆயிரம் பேருக்கு வருகிறது. சிகிச்சை பற்றி தவறான செய்தி பரப்பாதீங்க' என சமந்தா கூறி இருக்கிறார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri