26 வருடத்தை எட்டிய ரஜினியின் சூப்பர் ஹிட் படம் படையப்பா.. மொத்த வசூல் விவரம்
படையப்பா
ஒவ்வொரு கலைஞர்களுக்கும் அவர்களது திரைப்பயணத்தில் ஒரு ஸ்பெஷல் ஹிட் படம் இருக்கும்.
அப்படி நடிகர் ரஜினியின் படங்கள் எடுத்தால் நிறைய ஹிட் படங்கள் உள்ளன, அதில் ஒரு வெற்றிப் படம் தான் படையப்பா.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஏப்ரல் 10ம் தேதி 1999ம் ஆண்டு இப்படம் வெளியாகி இருந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான்.
பாக்ஸ் ஆபிஸ்
படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் ஆகிய நிலையில் படையப்பா செய்த மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. மாபெரும் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 58 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
இந்தியளவில் ரூ. 47.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 10. 87 கோடியும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.