3BHK, பறந்து போ படங்களின் 13 நாட்கள் வசூல்.. இத்தனை கோடியா?
கடந்த ஜூலை 4ம் தேதி தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படங்கள் 3BHK மற்றும் பறந்து போ. இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது 13 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.
பறந்து போ:
தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் ராம். இவர் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.
பறந்து போ திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி தமிழில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
தற்போது,13 நாட்களை கடந்த இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 9.5 கோடி வசூல் செய்துள்ளது.
3BHK:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீ கணேஷ். இவர் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்துள்ள திரைப்படம் 3BHK.
மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சரத்குமார், சித்தார்த். தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் 13 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரூ.14.5 கோடி இப்படம் வசூல் செய்துள்ளது.

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
