3 நாள் முடிவில் நாக சைத்தன்யா-சாய் பல்லவி தண்டேல் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
தண்டேல்
நாக சைத்தன்யா-சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் லவ் ஸ்டோரி இந்தப் படம் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பு பெற இந்த ஜோடி ஹிட் ஜோடியாக கொண்டாடப்பட்டது.
தற்போது இவர்கள் ஒன்றாக இணைந்து தண்டேல் என்ற படத்தில் மீண்டும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் தயாரான இப்படம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகி இருந்தது.
மீனவராக நடிக்கும் நாக சைத்தன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார்.
அவருக்கும் சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்கள் பற்றி இப்படம் பேசியுள்ளது.
பட வசூல்
ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் 3 நான் முடிவில் ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
