கோப்ரா பற்றி வந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் அஜய் ஞானமுத்து பதில் அளித்து இருக்கிறார்.
கோப்ரா ரன்டைம்
கோப்ரா படம் 3 மணி நேரம் 3 நிமிடம் மற்றும் 3 நொடிகள் என ரன்டைம் இருந்தது ஆரம்பத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்தின் நீளம் மிக அதிகம் இருப்பதாக விமர்சனம் எழுந்ததால் அதன் பிறகு 20 நிமிடம் குறைத்தனர்.
இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு 3 தான் லக்கி நம்பர், அதனால் தான் இப்படி ஒரு ரன்டைம் வைத்திருக்கிறார் என அதிகம் பேர் விமர்சித்தனர். தயாரிப்பாளர் குறைக்கச்சொல்லி கேட்டாலும் அதை கேட்காமல் இப்படி இயக்குனர் செய்தது தான் படம் மோசமான ரெஸ்பான்ஸ் பெற காரணம் எனவும் கூறப்பட்டது.
இயக்குனர் விளக்கம்
இந்நிலையில் அஜய் ஞானமுத்து இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்து இருக்கிறார். "3 என் லக்கி நம்பர் இல்லை. 3+3+3= 9 அதுவும் என் லக்கி நம்பர் இல்லை. 3*3*3 = 27 அதுவும் என் லக்கி நம்பர் இல்லை."
"படத்தின் முக்கியமான விஷயங்களை வைத்து பார்த்தபோது அப்படி ஒரு duration வந்தது. ஆடியன்ஸுக்கு அது பிடிக்கும் என நம்பினோம். சிலருக்கு அது பிடித்தும் இருந்தது."
"ஆம்.. படத்தின் நீளம் குறைவாக தான் இருக்க வேண்டும். அடுத்த முறை அதை சரியாக செய்கிறேன்" என அஜய் ஞானமுத்து தெரிவித்து இருக்கிறார்.
கோப்ரா 2 எடுப்பீங்களா?
"கோப்ரா 2ம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. அந்த திட்டம் இருந்தால் கிளைமாக்ஸ் வேறு மாதிரியாக இருந்திருக்கும்" என அஜய் ஞானமுத்து கூறினார்.