காலில் 3 ஸ்க்ரூ.. இனிமேல் அப்படி நடிக்க முடியாது: பிரித்விராஜ்
நடிகர் பிரித்விராஜ் மலையாளம் மட்டுமின்றி தமிழில் பல படங்கள் நடித்தவர். அவர் தனது காலில் 3 ஸ்க்ரூ பொருத்தப்பட்டு இருப்பதால் இனி ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என கூறி இருக்கிறார்.
பிரித்விராஜ் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கிலும் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அவர் வில்லனாகவும் பல படங்களில் மிரட்டலான நடிப்பை கொடுத்து வருகிறார்.
I, Nobody என்ற திரில்லர் படத்தில் சமீபத்தில் அவர் நடித்து இருந்தார். அது பற்றி பிரித்விராஜ் அளித்த பேட்டியில் சில விஷயங்களை கூறியுள்ளார்.

3 ஸ்க்ரூ
2023ல் நடந்த ஷூட்டிங் விபத்தில் தான் படுகாயம் அடைந்த நிலையில் அதற்காக பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
'எல்லா சண்டை காட்சியையும் நானே செய்வேன் என சொல்லி நடித்தேன். ஆனால் அந்த விபத்து காரணமாக மூன்று அறுவை சிகிச்சைகள் இடது காலில் செய்தேன். அதனால் 3 டைட்டானியம் ஸ்க்ரூ என இடது காலில் இருக்கிறது.
அதற்கு பிறகு ரிஸ்க் ஆன ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை" என பிரித்விராஜ் கூறியுள்ளார்.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri