3 ஆண்டுகள் ஆன சிம்புவின் மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
சிம்புவின் மாநாடு
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் மாநாடு. சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா காவல்துறை அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், மனோஜ் என திரையுலக பட்டாளமே நடித்துள்ளனர்.
மொத்த வசூல்
இந்நிலையில், மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படம் மொத்தமாக செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மாநாடு திரைப்படம் மொத்தமாக ரூ. 88 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்த படத்தின் தயாரிப்பாளர் இப்படம் வெளிவந்து 3 ஆண்டுகள் தொடர்ந்து நன்றி தெரிவித்து ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், " மாநாடு வெளியாகி 3 வது ஆண்டு இன்று.மாநாடு படத்தின் வெற்றி, அடையாளமாக நிறைய மாற்றங்களை உருவாக்கியது.
மாபெரும் வெற்றியைப் பெற உடன் நின்ற சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, மேஸ்ட்ரோ மாஸ்டர் யுவன் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், நண்பர்கள், உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிம்புவின் பேரன்பு ரசிகர்கள் ரசிகைகள் அனைவருக்கும் இந்த மூன்றாம் ஆண்டு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பேரன்பும், பெரும் நன்றிகளும்" என்று பதிவிட்டுள்ளார்.
மாநாடு வெளியாகி 3 வது ஆண்டு. மாநாடு படத்தின் வெற்றி, அடையாளமாக நிறைய மாற்றங்களை உருவாக்கியது.
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2024
தடைகள் தாண்டிய படம் பல நல்ல நிகழ்வுகளை தமிழ்சினிமாவிற்கு தந்தது. கொரோனாவிற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு கூட்டங் கூட்டமாக வரவைத்தது. ரிப்பீட் மோடில் படம் பார்க்க வைத்தது,… pic.twitter.com/Wjecbv1chB

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
