3 Years Of Ponniyin Selvan: தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி 2021ஆம் ஆண்டு வெளிவந்த படம் பொன்னியின் செல்வன்.
எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் என பலரும் எடுக்க ஆசைப்பட்டு எடுக்கமுடியாமல் போன, பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கினார் மணி ரத்னம். ரவி மோகன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
#3YearsOfPonniyinSelvan
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இன்றுடன் வெளிவந்து மூன்று ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #3YearsOfPonniyinSelvan என கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பொன்னியின் செல்வன் படம் தமிழ்நாட்டில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 225 கோடி வசூல் செய்தது.