ரஜினிகாந்த் கட்டிபிடித்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. இன்று ரூ. 3000 கோடிக்கும் சொந்தக்காரர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் மற்றும் கூலி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதுவும் அவர் தனது சிறு வயதில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வர, இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேள்வி எழுந்துள்ளது.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹ்ரித்திக் ரோஷன் தான். ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் இணைந்து நடித்த இந்தி திரைப்படம் பகவான் தாதா. இப்படத்தில் முக்கிய ரோலில் ஹ்ரித்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
சொத்து மதிப்பு
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஹ்ரித்திக் ரோஷனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3000 கோடிக்கும் மேல் இருக்கும் என பாலிவுட் பத்திரிகைகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
