33 நாட்களில் வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் அமரன் எவ்வளவு கலெக்ஷன்.. முழு விவரம்
அமரன் படம்
இந்த வருடத்தில் நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானது.
சில எதிர்ப்பார்த்த மாதிரி வெற்றியடைந்தது, நிறைய படங்கள் வந்த வேகம் தெரியாமல் திரையரங்குகளில் இருந்து காணாமல் போனது. ஆனால் வெற்றிக்கண்ட படங்களில் முக்கிய படமாக அமைந்துள்ளது சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன்.
மறைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களை பற்றிய படம், கதை, இசை, நடிகர்கள் தேர்வு என அனைத்தும் ரசிக்கும் வண்ணம் படம் அமைந்தது.
திரையரங்குகளில் வசூலில் மாஸ் காட்டும் இப்படத்தை எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தான் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்
தீபாவளி ஸ்பெஷலாக கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான இப்படம் 33 நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ. 334 வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். திரையரங்க லாபம் மட்டுமே ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.