பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் 4 பேருக்கு கொரோனா! ஷூட்டிங் நிறுத்தம்
தற்போது கொரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வடிவேலு தொடங்கி த்ரிஷா வரை தற்போது பல நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 'பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களுக்கு கொரோனா' என தலைப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சி ஆகிவிட வேண்டாம். அது ஹிந்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் தான்.
ஹிந்தியில் பாண்டியா ஸ்டோர் என்கிற பெயரில் இந்த சீரியல் ரீமேக் ஆகி இருக்கும் நிலையில் அதில் நடித்து வரும் நான்கு நடிகர்களுக்கு தற்போது கொரோனா உறுதி ஆகி இருக்கிறது. அதை அந்த தொடரில் தயாரிப்பாளர் சுஞ்சோய் வாத்வா உறுதி படுத்தி இருக்கிறார்.
பாண்டியா ஸ்டோர் சீரியலில் நடிக்கும் ஆலிஸ் கௌஷிக், அக்ஷய் கரோடியா, சிம்ரன் புதாருப் மற்றும் மோஹித் பார்மர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். செட் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது என தயாரிப்பாளர் அறிக்கையில் கூறி இருக்கிறார்.