மாநாடு படம் வெளிவந்து 4 ஆண்டுகள்.. படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
மாநாடு
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இருவருக்குமே மாஸ் கம்பேக் படமாக அமைந்தது மாநாடு. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்தார். குறிப்பாக இடைவேளைக்கு பின் எஸ்.ஜே. சூர்யாவின் அமர்க்களமான நடிப்பு எல்லாம் வேற லெவலில் இருக்கும்.

மேலும், எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதையில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது.

நான்கு ஆண்டுகள்
இந்த நிலையில், இன்றுடன் இப்படம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை மகிழ்ச்சியுடன் எக்ஸ் பக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு செய்துள்ளார். மேலும் நான்கு ஆண்டுகளை கடந்திருக்கும் மாநாடு படம், வெளிவந்த சமயத்தில் எவ்வளவு வசூல் செய்தது உங்களுக்கு தெரியுமா..

2021ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மாநாடு உலகளவில் ரூ. 88 - 90 கோடி வரை வசூல் செய்தது. இதன்மூலம் அந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் டாப் 5ல் மாநாடு படமும் இடம்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
