பாக்ஸ் ஆபிஸ்: 5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?
தி பாரடைஸ்
தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிறைய புதுப்புதுப்படங்கள் வெளியாகின்றன.
அப்படி கடந்த வாரம் தெலுங்கு சினிமாவில் வெளியான திரைப்படம் தி பாரடைஸ். எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வியாழக்கிழமை இப்படம் வெளியாகி இருந்தது.

பான் இந்தியா படமாக தி பாரடைஸ் வெளியாகி இருந்தது, இதில் நாயகியாக கயாடு லோஹர் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன.
நடிகர் நானியும் பாராட்டுக்கும் ட்ரோல்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்டிருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ. 88 கோடிக்கும் அதிகமான வசூலை பெற அடுத்தடுத்தும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை இப்படம் மொத்தமாக ரூ. 145 கோடி வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.