5 ஆண்டுகளை கடந்த மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் விவரம் இதோ
5 years of Maanaadu movie & box office collection: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து 2021-ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் இன்றுடன் 5 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த நிலையில், இப்படம் மொத்தமாக செய்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
மாநாடு
டைம் லூப் கான்சப்ட்-ஐ மையமாக வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் மாநாடு. சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்திருந்தார்.

அரசியல் சதி, அதனால் மதத்திற்குள் ஏற்படும் பிளவு, இதனை தடுக்க ஹீரோவும் அவருக்கு எதிராக வில்லனும் டைம் லூப்பில் சிக்கி தவித்து, பின் அதன் மூலம் மொத்த சதியை தடுத்து நிறுத்த எடுக்கும் முயற்சி என மாநாடு திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையில் அமைந்திருக்கும்.
5 ஆண்டுகளை கடந்த மாநாடு
2021-ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி வெளியான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இந்நிலையில், மாநாடு திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இதில், "மாநாடு மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

மொத்த வசூல்
சிம்புவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும். இந்த நிலையில், 5 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் மாநாடு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ. 88 - 90 கோடி வரை வசூல் செய்தது.
'மாநாடு' படம் வெளிவந்து ஐந்தாவது வருடமாகிறது. 'மாநாடு' மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன். அதுவும் உலகமே கோவிட் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த போது மக்களைத் திரையரங்கிற்குத் திரட்டி வந்த படம். சாதாரண நாட்களில் மாநாடு வெளியாகி இருந்தது என்றால் இன்னும் பல மடங்கு வசூலித்திருக்கும். ஆத்ம திருப்தி தந்த அப் படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்பு தம்பி சிலம்பரசன் டி.ஆர், இயக்குநர் சகோதரர் வெங்கட் பிரபுவிற்கு மரியாதைக்குரிய எஸ்.ஜே. சூர்யா, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கும் என்றென்றும் என் நன்றியின் வெளிப்பாடு இருந்துகொண்டே இருக்கும். உடன் உறுதுணையாக நின்று உழைத்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமார், எடிட்டர் கே. எல். பிரவீண், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோருக்கும்... நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி ஒய்.ஜி. மகேந்திரன், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், வாகை சந்திர சேகர், மஹத், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் கே பாரதி , உதயா, டேனியல் போப், அரவிந்த் ஆகாஷ், மற்றும் உடன் நடித்த நடிகர்..நடிகைகளுக்கும், அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும்... வெற்றியை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர் A. ஜான் அனைவருக்கும் என் என்றென்றுமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் நமக்கான பாதையைப் போட்டுக் கொடுக்கிறது. வழுக்குகிறோம் பல சமயம். சில சமயம் அப்பாதை பூப்பாதையாக மாறுகிறது. அப்படியொரு பூப்பாதையின் மைல் கல்லாக 'மாநாடு' அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது என்பதே ஆச்சரியமாக உள்ளது. ஆச்சரியங்கள் உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசாக எண்ணிக்கொண்டு மேலும் உழைக்க முயற்சிக்கிறேன்.. தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதே நோக்கம். நன்றி எஸ் டி ஆரின் இரத்தங்களான அன்புத் தம்பி தங்கைகளுக்கும் .. படம் பார்த்து வெற்றியடையச் செய்த அனைத்து சினிமா பார்வையாளர்களுக்கும்! #5yrsOfMaanaadu #BBMaanaadu #STR -சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர்/ இயக்குநர் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ். @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @kalyanipriyan @thisisysr @Richardmnathan @Cinemainmygenes @UmeshJKumar @silvastunt @Premgiamaren @Anjenakirti @MahatOfficial @johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2026
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri