5 வருடமாக நடிகர் பிரபுவை காதலித்து வந்த நடிகை குஷ்பூ.. அதன்பின் காதலை முறித்து கொண்டது ஏன்.. இதோ
90ஸ் களில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வந்தவர் நடிகை குஷ்பூ. ஆம் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஆனால் நடிகர் பிரபுவுடன் சில படங்களில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் 5 வருடங்கள் மட்டுமே நீடித்த இந்த காதல், அதன்பின் காணாமல் போனது. ஆம் திடீரென பிரபு குஷ்புவின் காதலை முறித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார் நடிகை குஷ்பூ.
அது ஒரு அழகிய நாட்கள் எனவும், என் வாழ்நாளில் மறக்க முடியாத என்றும் இளமையான காதல் தருணங்கள் அது என கூறியுள்ளார். ஆனால் இருவரும் திருமணம் செய்யாமல் போனது துரதிர்ஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்கள் காதல் எப்படி முறிந்தது என்பதை கூறி, அவரது குடும்பத்தை சங்கடத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த காதல் முறிவுக்கு பின் இயக்குனர் சுந்தர்.சி என்ன மாற்றி விட்டார் எனவும் கூறியுள்ளார் என தகவல்கள் கூறுகின்றனர்.