6 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லப்பர் பந்து
சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் வந்த கேப்டன் விஜயகாந்தின் ரெபரென்ஸ் திரையரங்கை அதிர வைத்தது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள இப்படம் 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் லப்பர் பந்து திரைப்படம் ரூ. 9.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் லப்பர் பந்து படத்தின் இறுதி வசூல், எந்த அளவிற்கு இருக்கும் என்று.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
