பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா?
சீன் படம்
Scene 6 Days Tamilnadu Bo: சூர்யாவிற்கு இந்த வருடம் மிகவும் அமோகமாக அமைந்துள்ளது.
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சரியான வெற்றியை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு 2026 வருடம் ஹாட்ரிக் வெற்றி வருடமாக அமைந்துள்ளது.
ஜீத்த மாதவன், தமிழ் சினிமாவில் சூர்யாவின் சீன் படம் மூலம் அறிமுகமாகி இருப்பவர். சூர்யாவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடிகை நஸ்ரியா நடிக்க நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூர்யா எத்தனையோ போலீஸ் கதைக்களத்தை மையப்படுத்தி படங்கள் நடித்துள்ளார், ஆனால் இந்த போலீஸ் கதை அவரது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையாக அமைந்துள்ளது.
கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை செய்கிறது.
வசூல் எப்படி
சூர்யாவின் நடிப்பில் இந்த வருடம் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை தொடர்ந்து இந்த சீன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.

இப்படம் 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சீன் ரூ.64 கோடி வரை வசூல் வேட்டை செய்திருக்கிறது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் News Lankasri