2019 தீபாவளிக்கு வெளிவந்த பிகில், கைதி .. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா
2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் இருந்து பிகில் மற்றும் கைதி என இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளிவந்தன.
பிகில்
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளிவந்த பிகில் படம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. பெண் கதாபாத்திரங்களுக்கு இப்படத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ராயப்பன் கதாபாத்திரம், ஏ.ஆர். ரஹ்மான் இசை என படம் வேற லெவலில் இருந்தது.

இன்றுடன் இப்படம் வெளிவந்து ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இப்படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிகில் உலகளவில் ரூ. 290 கோடி முதல் ரூ. 300 கோடி வரை வசூல் செய்திருந்தது.
பைசன் பட பாணியில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழக கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா.. குவியும் வாழ்த்துக்கள்
கைதி
அதே நாளில் பிகில் படத்துடன் வெளிவந்த கைதி திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பிய இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 108+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
