6 வருடத்தை எட்டிய நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படம்... மொத்த வசூல் விவரம்
2.0 படம்
தமிழ் சினிமாவை உலக அளவில் தலைநிமிர வைக்கும் படமாக அமைந்தது ரஜினியின் 2.0 படம்.
கற்பனைக்கும் எட்டாத காட்சிகள், எப்படி இப்படியெல்லாம் செய்தார்கள் என வியக்க வைக்கும் வகையில் VFX காட்சிகள் என படத்தில் பல விஷயங்கள் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும்.
இப்போது உள்ள மாற்ற வேண்டிய ஒரு விஷயத்தை கூறும் வகையில் தான் இப்படத்தின் கதை அமைந்தது. ஷங்கர் இயக்க ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க கடந்த 2018ம் ஆண்டு வெளியானது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 400 முதல் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் தற்போது 6 வருடங்களை எட்டியுள்ளது. எனவே ரசிகர்கள் இப்படத்தை பற்றி அதிகம் பேசி வர பாக்ஸ் ஆபிஸ் விவரமும் வலம் வருகிறது.
இதோ படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்,
- தமிழ்நாடு- ரூ. 135 கோடி
- ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 95 கோடி
- கேரளா- ரூ. 21.50 கோடி
- கர்நாடகா- ரூ. 54 கோடி
- மற்ற இடங்கள்- ரூ. 250 கோடி
- ஓவர்சீஸ்- ரூ. 180 கோடி
மொத்தமாக படம் ரூ. 735 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
