தேசிய விருதுகளில் தமிழ் படங்கள் புறக்கணிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி
சற்றுமுன்பு 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் RRR, புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு அதிகம் விருதுகள் கிடைத்து இருக்கிறது. மேலும் தமிழில் எந்த ஒரு படத்திற்கும் விருது கிடைக்கவில்லை.
இரவின் நிழல் படத்தில் மாயவா தூயவா பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகி விருது கிடைத்து இருக்கிறது.
இந்த விருதுகள் 2021ல் வெளிவந்த படங்களுக்கானது மட்டுமே, அடுத்து 2022ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிப்பும் கூடிய விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ரசிகர்கள் அதிருப்தி
2021ல் தமிழில் வந்த பல முக்கிய படங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தற்போது தமிழ் ரசிகர்கள் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், கர்ணன் உள்ளிட்ட பல படங்கள் கண்டுகொள்ளப்படவில்லை என ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
Some great examples of #NationalFilmAwards2023
— Deva shetty (@devashetty19) August 24, 2023
Should look at #JaiBhim#Karnan #SarpattaParambarai pic.twitter.com/6taeDajB0y