70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ
70வது Filmfare
விருது என்பது ஒரு கலைஞருக்கு ஊக்கமாக அமையும் ஒன்றாகும். அதிலும் இந்திய அளவில் பெருமைக்குரிய விருதுகளாக பார்க்கப்படுபவை கிடைத்தால், அந்த கலைஞருக்கு அதைவிட கௌரவமும், பெரும் மகிழ்ச்சியும் இருக்காது.

அப்படி 70 ஆண்டுகளை கடந்து திரையுலக பிரபலங்களை கௌரவித்து வருகிறது Filmfare விருதுகள். நேற்று 70வது Filmfare விருதுகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகிற்காக கிடைத்த விருதுகள் என்னென்ன என்பதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
பட்டியல்:
சிறந்த திரைப்படம் - அமரன்
சிறந்த இயக்குநர் - பி.எஸ். வினோத் ராஜ் (கொட்டுக்காளி), ராஜ்குமார் பெரியசாமி ( அமரன்)
சிறந்த படம் (விமர்சன ரீதியாக) - மெய்யழகன் (இயக்குநர் பிரேம் குமார்)

சிறந்த முன்னணி நடிகர் - சிவகார்த்திகேயன் (அமரன்)
சிறந்த நடிகர் (விமர்சன ரீதியாக) - அரவிந்த் சாமி (மெய்யழகன்)
சிறந்த முன்னணி நடிகை - சாய் பல்லவி (அமரன்)
சிறந்த நடிகை (விமர்சன ரீதியாக) - அன்னா பென் (கொட்டுக்காளி)

சிறந்த துணை நடிகர் - கார்த்தி (மெய்யழகன்)
சிறந்த துணை நடிகை - பார்வதி (தங்கலான்), சுவாசிகா (லப்பர் பந்து)
சிறந்த ம்யூசிக் ஆல்பம் - ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)
சிறந்த அறிமுக நடிகர் - ஹிருது ஹாரூன் (தக்ஸ்)

சிறந்த அறிமுக நடிகை - ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்)
சிறந்த ஒளிப்பதிவு -சி.ஹெச். சாய் (அமரன்)
Outstanding Performance - விக்ரம் (தங்கலான்)
சிறந்த பாடல் வரிகள் - உமா தேவி (யாரோ இவன் யாரோ - மெய்யழகன்)

சிறந்த பின்னணி பாடகர் - ஹரிச்சரண் (ஹே மின்னலே - அமரன்)
சிறந்த பின்னணி பாடகி - ஸ்வேதா மோகன் (ஹே மின்னலே - அமரன்)
சிறந்த அறிமுக இயக்குநர் - சுரேஷ் மாரி (ஜே பேபி), தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)