7ஜி ரெயின்போ காலணியில் சோனியா, ரவி கிருஷ்ணாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபலங்கள்.. முழு விவரம்
7ஜி ரெயின்போ காலணி
காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தை செல்வராகவன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய இப்படம் விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

தனது காதலியை முதன்முறையாக அறிமுகப்படுத்திய முத்தழகு சீரியல் நாயகன் ஆஷிஷ்... செம கியூட்டான ஜோடி, யார் பாருங்க
ஒரு தலை காதல், காதலின் பிரிபு, பிரிவின் வலி என அழுத்தமான திரைக்கதையோடு படத்தை எடுத்திருந்தார் செல்வராகவன்.
சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா ஜோடியாக நடித்த இப்படத்தின் 2ம் பாகத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
முதல் சாய்ஸ்
ஒரு படம் எடுக்க தொடங்கியதில் இருந்து முடிவுக்கு வரும் வரை நிறைய மாற்றங்கள் நடக்கும்.
அப்படி இந்த படத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள், அதன்படி நாயகன்-நாயகியாக நடிக்க முதலில் தேர்வான பிரபலங்களும் வேறு. மாதவன் மற்றும் சூர்யா முதலில் தேர்வாக இருவருமே வேறொரு படங்களில் பிஸியாக இருந்துள்ளனர்.
அதன்பின் நாயகியாக சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக தேர்வாகி இருக்கிறார். பின் ரவி கிருஷ்ணா மற்றும் சுவாதி இருவரையும் வைத்து 20 நாட்கள் படப்பிடிப்பு சென்றுள்ளது.
அந்த நேரத்தில் சுவாதி படித்துக் கொண்டிருந்ததால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போயுள்ளது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
