7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்- நாயகி இவரா?
ஹிட் படம்
ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் உடனே அதன் 2ம் பாகம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக இருக்கும்.
அப்படி ரசிகர்கள் 2ம் பாகத்திற்காக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. 2004ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் இப்படம் வெளியாகி இருந்தது.
யுவன் இசையமைப்பில் கண்பேசும் வார்த்தைகள், கனா காணும் காலங்கள் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.
19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்துக்கான தகவல்கள் வந்துள்ளன.
பட தகவல்
செல்வராகவனே 2ம் பாகத்தை இயக்க ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.
ஆனால் நாயகியாக ராங்கி படத்தில் த்ரிஷாவின் அண்ணன் மகளாக நடித்த அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின, இந்த 2ம் பாகத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.
7ஜி ரெயின்போ காலனி 2-ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
