8 நாட்களில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பறந்து போ
18 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருபவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார். அதனை தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
இவர் இயக்கத்தில் ஐந்தாவதாக வெளிவந்துள்ள திரைப்படம்தான் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா முதல் முறையாக ராமின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பத்திரிக்கையாளர்களை படக்குழு சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.
வசூல்
இந்த நிலையில், 8 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் பறந்து போ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 6.8 கோடி வசூல் செய்துள்ளது.