வயநாடு நிலச்சரிவு.. ரூ. 1 கோடி கொடுத்து உதவிய 80ஸ் கதாநாயகிகள்
வயநாடு நிலச்சரிவு
கேரளாவில் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இதில் இதுவரை 350க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வயநாட்டில் கஷ்ட்டப்படும் மக்களுக்கு திரையுலக சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகிறார்கள்.

தமிழில் 12 நடிகர்களால் நிராகரிக்க பட்ட படம்.. ரீமேக்கில் ரூ. 100 கோடி வசூல் ஈட்டியது! என்ன படம் தெரியுமா?
ராஷ்மிகா மந்தனா, விக்ரம், மோகன்லால், மம்மூட்டி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிரபாஸ் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து வயநாடு மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
உதவிய 80ஸ் கதாநாயகிகள்
இந்த நிலையில் தற்போது திரையுலகில் 80ஸ்-களில் முன்னணி நடிகைகளாக இருந்த குஷ்பூ, லிசி, மீனா, சுகாசினி ஆகியோர் கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சன்னதிது நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
