விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா
தளபதி விஜய்
ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படம் உருவாகவுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பை இந்த கூட்டணி தற்போது உருவாக்கியுள்ளது.
தெறி
விஜய் நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெறி. அட்லீ இயக்கிய இப்படம் மாபெரும் சூப்பர்ஹிட்டானது. சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், வில்லன் ரோலில் நடித்திருந்த இயக்குனர் மகேந்திரனுக்கு பதிலாக முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது மைக் மோகன் தானாம்.
உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ
ஆம், 80ஸ் காலகட்டத்தில் ஹீரோவாக கொடிகட்டி பறந்த நடிகர் மோகன் தான் தெறி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தாராம். ஆனால், அதை வாய்ப்பை மோகன் மறுத்துவிட்டாராம்.
ஏனென்றால், தான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் உறுதியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன்படி, தற்போது ஹரா எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மாதிரியான வீடியோ காட்டி அதே மாதிரி பண்ண சொல்லி அடிச்சாரு.. பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தா

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
