விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ள எவர்க்ரீன் கதாநாயகன்.. யாரும் எதிர்பாராத கூட்டணி
தளபதி 66
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 66. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
மேலும், முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசையமைக்கிறார்.
முதலில் சரத்குமார் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், பின் அவர், விஜய்க்கு தந்தையாக நடிக்கிறார் என்று உறுதியானது.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் என்றும் அதில் ஒருவர் பிரகாஷ் ராஜ் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இதுவரை இரண்டாவது அண்ணனாக யார் நடிக்க போகிறார் என்று தெரியாமல் இருந்தது.
எவர்க்ரீன் கதாநாயகன்
இந்நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்க்கு இரண்டாவது அண்ணனாக, எவெர்க்ரீன் 80ஸ் கதாநாயகன் மைக் மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் விரைவில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுகிறதா என்று..