80ஸ் பில்டப் படம் எப்படி இருக்கு.. வெளிவந்த விமர்சனம் இதோ
சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப்.
இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனினீஸ்காந்த், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறிய விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
முதலில் படத்தின் கதை என்னவென்று பார்த்துவிட்டு, பின் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
ஜெமின் பரம்பரையை சேர்ந்த சந்தானத்தின் தாத்தா சுந்தர் ராஜன் ஒரு கட்டத்தில் கல்கண்டு என நினைத்து வைரக்கல்லை சாப்பிட்டு இறந்து போகிறார்.
ஜெமின் வீடு சாவு வீடாக மாற அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சொந்தக்காரர்கள் அனைவரும் வருகிறார்கள்.
அதில் கதாநாயகியும் எண்ட்ரி கொடுக்கிறார். அவரை பார்த்தவுடன் தாத்தா இறந்த சோகத்தை ஓரமாக வைத்துவிட்டு, காதலில் விழுந்துவிடுகிறார் சந்தானம். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதையாகும்.
ரசிகர்கள் விமர்சனம்
80ஸ் பில்டப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 'சந்தானம் நடிப்பு சூப்பர். ஆனந்த்ராஜ் பட்டையை கிளப்பி விட்டார். 80ஸ் பேக் ட்ராப் படத்திற்கு நன்றாகவே உதவி இருக்கிறது. சில இடங்களில் நகைச்சுவை எடுபடவில்லை என்றாலும் பல இடங்களில் பக்காவாக ஒர்கவுட் ஆகியுள்ளது என்கின்றனர்.
ஒரு பக்கம் பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட மறுபக்கம் படம் பார்த்த பலரும் கதறி கதறி 80ஸ் பில்டப் படத்தை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள் என பதிவு செய்து வருகிறார்கள். எந்த ஒரு இடத்திலும் நகைச்சுவை என்று சொல்லும் அளவிற்கு எதுவுமே இல்லை என கூறுகின்றனர்.
ஆனால் இன்னும் சிலர் இடைவேளை காட்சி வரை பக்காவாக இருந்த, குறிப்பாக இடைவேளை காட்சியில் ஆனந்த்ராஜ் மற்றும் ஆடுகளம் நரேன் காட்சிகள் நகைச்சுவையில் பட்டைய கிளப்பிவிட்டது. ஆனால், அதன்பின் படம் ஒண்ணுமே இல்லை என கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இப்படி 80ஸ் பில்டப் படத்திற்கு முற்றிலும் கலவையான விமர்சனங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#80sBuildup - Harmless Entertainment.@iamsanthanam Neat and Pref.#AnandaRaj Shines.Adpt Casting.Music Supports.Comedies are Worked.Decent Attempt.Good Plot.80's Setup,Interval Block,#KamalHaasan and #Rajinikanth References,Climax are Good.
— Moviezwood (@MoviezWood) November 24, 2023
Family Watch.
Rating:3.0/5. pic.twitter.com/0r8UdaTVH6
#80sBuildup one word review ?
— Ram Ganesh Manivelu (@krathaganhere) November 24, 2023
Aana indha padathuku yen ivalo promotion nu ipo than da theriyuthu@Dhananjayang sir ? arumai sir #80sBuildupreview @StudioGreen2 pic.twitter.com/BmPGQFVQ44