இரண்டு நாட்களில் சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
80ஸ் பில்டப்
இந்த வாரம் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த சில திரைப்படங்களில் ஒன்று சந்தானம் நடித்த 80ஸ் பில்டப்.
துருவ நட்சத்திரம் மற்றும் கான்ஜுரிங் கண்ணப்பன் ஆகிய படங்கள் வெளிவரவில்லை என்றதும், 80ஸ் பில்டப் படத்தின் மீது அதிகம் கவனம் சென்றது.
ஆனால், இப்படம் முழுமையாக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. முதல் பாதி விறுவிறுப்புக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாமல் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்பட்டு சரிவை சந்தித்துவிட்டது என்றும் ரசிகர்கள் கூறினார்கள்.
கல்யாண் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆனந்த் ராஜ், மனோபாலா, சுந்தர் ராஜன், கே.எஸ். ரவிக்குமார், முனீஸ்காந்த் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இரண்டு நாட்கள் வசூல் விவரம்
முதல் நாள் உலகளவில் ரூ. 1.2 கோடி வரை வசூல் செய்திருந்த 80ஸ் பில்டப் திரைப்படம் இரண்டாவது நாள் முடிவியில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இரண்டாவது நாள் உலகளவில் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ. 2.2 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
