பிரபலத்தின் மகள் திருமணத்தில் ஒன்று கூடிய 80களின் பிரபலங்கள்- யாரெல்லாம் உள்ளார்கள் பாருங்க
பிரபலத்தின் மகள்
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய பிரபலங்களை நம்மால் மறக்கவே முடியாது.
அந்த காலத்தில் அருமையான படங்கள், எந்த காலம் ஆனாலும் ரசிக்கும்படியான பாடல்கள், சிறந்த நடிகர்கள், சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படங்கள் அமைந்தன.
தற்போது பல நடிகர்கள் சினிமா பக்கம் இல்லை என்றாலும் அவ்வப்போது பிரபலங்களின் விசேஷங்களில் காண முடிகிறது. அதிலும் 80களில் நடித்த நடிகர்கள் வருடத்திற்கு ஒருமுறை இதை செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள்.
அதாவது எல்லோரும் ஒரு நாள் ஏதாவது பிரபலத்தின் வீட்டில் சந்திக்க வேண்டும் என்பது தானாம், அந்த ரீயூனியன் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
தற்போது 80, 90களின் பிரபலங்கள் பலர் நடிகர் ரகுமானின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த போட்டோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.