80களில் கலக்கிய இந்த நாயகி யார் என்று தெரிகிறதா?- அட இவங்க தானா?
யார் இது?
சிறுவயது போட்டோ இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் என்று பலரும் கேள்வி எழுப்பி பதிவுகள் போட்டு வருகிறார்கள். ஆனால் நிறைய பேருக்கு இவர் யார் என்பது தெரியவில்லை.
80களில் கலக்கிய ஒரு நடிகை தான் இவர். பாரதிராஜாவால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டு சின்ன கவுண்டர், இந்தியன் போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து இந்த நடிகை வெளியேறுகிறாரா?- பிரபலத்தின் பதிவு, குழப்பத்தில் ரசிகர்கள்
80களில் டாப் நாயகர்களாக இருந்த கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்றவர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
பிரபல நடிகை
ஆனால் ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
யார் இவர் இவ்வளவு விவரங்களை பார்த்ததும் கண்டிப்பாக பலருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிய வந்திருக்கும். வேறுயாரும் இல்லை நடிகை சுகன்யா தான் இது.