83 படத்தில் நடித்திருக்க வேண்டிய நடிகர் சிவகார்த்திகேயன்! யார் கதாபாத்திரத்தில் தெரியுமா?

Sivakarthikeyan Jeeva 83 Ranveer Singh
By Jeeva Dec 06, 2021 10:50 AM GMT
Report

கடந்த 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் முதன்முதலாக கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது இந்தியா அணி.

அந்த சாதனையை மீண்டும் ரசிகர்களுக்கு கண் முன் கொண்டுவர உருவாகியுள்ள திரைப்படம் தான் 83, இப்படத்தில் அப்போது நடந்த உண்மை சம்பவத்தை காட்டியுள்ளனர்.

மேலும் இதில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அப்போதைய தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமுழுவதிலும் வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இதில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜீவாவிற்கு பதிலாக முதலில் நடித்திருக்க வேண்டியதே நடிகர் சிவகார்த்திகேயன் தானாம்.

ஸ்ரீகாந்தின் முக அம்சமும் சிவகார்திகேயனுக்கு சரியாக இருக்கும் என்பதால் அவரை தான் முதலில் அணுகியுள்ளனர். ஆனால் அயலான் பட காரணமாக அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US