வெளிவந்த 9 ஆண்டுகள் ஆகும் அனேகன் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
கே.வி. ஆனந்த்
இயக்குனர் கே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ஒருவர். தனது திரை பயணத்தை ஒளிப்பதிவாளராக துவங்கிய இவர், அதன்பின் இயக்குனராக அறிமுகமானார்.

அயன், மாற்றான், கோ, அனேகன், கவண் போன்ற வித்தியசமான கதைக்களங்களம் கொண்ட திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் இழப்பை கொடுத்துள்ளது.

அனேகன்
இவர் இயக்கி தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் அனேகன். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நவரச நாயகன் கார்த்திக் நடித்திருப்பார். அதுவும் அவரை வில்லனாக நடிக்க வைத்திருப்பார் கே.வி. ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற தங்கமாரி ஊதாரி, தொடுவானம் போன்ற படங்கள் சூப்பர்ஹிட்டானது.

அனேகன் திரைப்படம் இன்றுடன் வெளிவந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரசிகர்கள் இதை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
