9 years of ரஜினியின் கபாலி.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா, பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கபாலி
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி நடித்த திரைப்படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து தன்ஷிகா, ராதிகா அப்டே, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூலில் மாபெரும் சாதனைகளை பாக்ஸ் ஆபிசில் படைத்தது. ரசிகர்களால் இன்றும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் கபாலி திரைப்படம், இன்றுடன் வெளிவந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த நிலையில், அந்த சமயத்தில் இப்படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க..
பாக்ஸ் ஆபிஸ்:
தமிழ்நாடு - ரூ. 76 கோடி
ஆந்திரா மற்றும் தெலுங்கானா - ரூ. 39 கோடி
கேரளா - ரூ. 16.5 கோடி
கர்நாடகா - ரூ. 31 கோடி
ரெஸ்ட் ஆப் இந்தியா - ரூ. 42 கோடி
வெளிநாட்டில் - ரூ. 105 கோடி
மொத்தமாக - ரூ. 309 கோடி