9 வருடங்களை கடந்த வேதாளம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் கூட்டணிகளில் ஒன்று அஜித் - சிவா கூட்டணி. வீரம் படத்தின் மூலம் இவர்களுடைய கூட்டணி முதல் முறையாக அமைந்தது.
வேதாளம்
முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என 4 படங்கள் இந்த கூட்டணியிலிருந்து வெளிவந்தது. இதில் விவேகம் படம் மட்டுமே சற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த 4 திரைப்படங்களில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் வேதாளம். 2014ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
வேதாளம் வசூல்
இந்த நிலையில் இன்றுடன் வேதாளம் படம் வெளிவந்து 9 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் வேளையில், அப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் வேதாளம் படம் ரூ. 128 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
